News December 5, 2024
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 115 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் அதிவேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் மாவட்டம் முழுவதும் உள்ள 369 ஏரிகளில் 115 ஏரிகள், அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 33 ஏரிகள் 75 % முதல் 99 % வரையும்,49 ஏரிகள் 75 % வரையும்,125 ஏரிகள் 25 முதல் 50 % வரையும், 47 ஏரிகள் 25 % குறைவாகவும் நிரம்பியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
Similar News
News November 24, 2025
ராணிப்பேட்டை: ரயிலில் கஞ்சா கடத்தல்; தட்டி தூக்கிய போலீஸ்

அரக்கோணம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளர் சந்திரகுமார் தலைமையிலான போலீசார் சோளிங்கர் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, போலீசாரைக் கண்டு ஓட முயன்ற இரு வாலிபர்களைப் பிடித்தனர். அவர்கள் மும்பையிலிருந்து ரயில் மூலம் கஞ்சா கடத்தி வந்த முகேஷ் மற்றும் சுஜித்குமார் எனத் தெரியவந்தது. அவர்களைக் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 24, 2025
ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (நவ-23) இரவு 10 மணி முதல், இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.