News December 5, 2024
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரவலாக மழை

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஃபெஞ்சல் புயல் காரணமாக ராணிப்பேட்டை ,சென்னை,கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை,கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல வட மாவட்டங்களில் அதி கனமழை கொட்டி தீர்த்தது. அதன் தாக்கம் முடிவதற்குள் நேற்று நள்ளிரவு ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு, அரக்கோணம், தக்கோலம் உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவில் பரவலாக மழை பெய்தது. உங்கள் பகுதியில் மழை பெய்ததா என்பதை கமென்டில் சொல்லுங்க
Similar News
News September 16, 2025
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரவு ரோந்து நடவடிக்கை

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையால், 16.9.2025 அன்று இரவு பாதுகாப்பு பணிக்காக ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மற்றும் வாலாஜாபேட்டை சாலைகள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பொறுப்பான காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர தேவைகளுக்கு கட்டுப்பாட்டு அறை எண்கள் வெளியிடப்பட்டு, பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
News September 16, 2025
ராணிப்பேட்டையில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்

ராணிப்பேட்டை 17-09-2025 அன்று “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்கள் நடைபெறுகின்றன. ராணிப்பேட்டை நகராட்சியில் காரை லிட்டில் ஸ்டார் பள்ளி, திமிரி பேரூராட்சியில் வள்ளலார் நகர் AVM மஹால், நெமிலி வட்டாரத்தில் கொந்தங்கரை-வேப்பேரி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, சோளிங்கர் வட்டாரத்தில் கரடிக்குப்பம் சமூகக்கூடம் மற்றும் திமிரி வட்டாரத்தில் குட்டியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய இடங்களில் முகாம்கள் நடைபெறும்.
News September 16, 2025
டி என் பி எஸ் சி குரூப் 2 மற்றும் 2ஏ மாதிரி தேர்வு நடைபெறுகிறது

இன்று செப்டம்பர் 15 ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் டி என் பி எஸ் சி குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வில் பங்கேற்க விரும்பும் நபர்களுக்காக மாதிரி தேர்வு செப் 1 முதல் செப்டம்பர் 25 வரை நடைபெறுகிறது இதில் பங்கேற்ற விரும்பும் நபர்கள் https:/tamilnaducareerservices.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து பங்கேற்கலாம் என்று தெரிவித்துள்ளது