News March 19, 2024

ராணிப்பேட்டை: பாமகவுக்கு எந்தெந்த தொகுதிகள்?

image

பாஜக – பாமக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் விழுப்புரம், தைலாபுரத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதையடுத்து பாமகவிற்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Similar News

News November 22, 2025

கலவை ஒழுங்கு முறை கூடத்தில் நெல் விற்பனை

image

கலவை ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு திமிரி ஒன்றியம் கலவை சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகள் நிலத்தில் விளைந்த நெல் மற்றும் தானியங்களை விற்பனை செய்து வருவது வழக்கம். இந்நிலையில், கலவை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று (நவ.21) ஆயிரம் நெல் மூட்டைகள் விற்பனை செய்யப்பட்டன. இதில் மீனம்பூர் நெல் ரகம் அதிகபட்ச விலையாக ரூ.3081க்கு விற்பனையானது.

News November 22, 2025

ராணிப்பேட்டையில் வேலை வாய்ப்பு முகாம்!

image

ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் டிசம்பர்.6ஆம் தேதி கலவையில் உள்ள ஆதிபராசக்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெற உள்ளது.‌ இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் இங்கே கிளிக் செய்து முன் பதிவு செய்யலாம்.

News November 22, 2025

ராணிப்பேட்டை: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

image

ராணிப்பேட்டை மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <>இங்கு க்ளிக்<<>> செய்து உங்கள் மாவட்டம், சர்வீஸ் எண், ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண்ணை பதிவிட்டு REGISTER பண்ணுங்க. அதன் பின் மாதந்தோறும் கரண்ட் பில் எவ்வளவு என்ற தகவல் உங்க போனுக்கே வந்துடும். மேலும் தகவலுக்கு 94987 94987 என்ற எண்ணை தொடர்பு கொல்லம். இந்த அருமையான தகவலை உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ண மறந்துடாதீங்க!

error: Content is protected !!