News March 28, 2024

ராணிப்பேட்டை: தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு

image

அரக்கோணம் மக்களவை தேர்தலை முன்னிட்டு, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையினை நேற்று அரக்கோணம் பாராளுமன்ற தொகுதியின் தேர்தல் பொது பார்வையாளர் சுனில் குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் உடன் இருந்தார்.

Similar News

News November 1, 2025

ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (அக்-31) இரவு 10 மணி முதல் இன்று (நவ.1) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News October 31, 2025

ராணிப்பேட்டை: போதை மாத்திரைகள் பதுக்கிய 2 பேர் கைது

image

வாலாஜா பகுதியில் தருண் என்பவரும் அவருடைய நண்பரும் சேர்ந்து வீட்டில் போதை மாத்திரைகளை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு இன்று (அக்.31) தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சென்ற காவலர் சாலமன், அவர்களிடம் இருந்து 800 போதை மாத்திரைகளை கைப்பற்றினார். மேலும், இந்த மாத்திரைகள் புனேவில் இருந்து கொரியர் மூலம் வரவைக்கப்பட்டுள்ளது என்பதும் தெரியவந்துள்ளது. தற்போது அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

News October 31, 2025

ராணிப்பேட்டை: 12 படித்திருந்தால் போதும் – தேர்வு கிடையாது!

image

தமிழகத்தில் உள்ள நபார்டு வங்கியின் நிதிச் சேவை நிறுவனத்தில் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பதாரர்கள் 18 வயதை பூர்த்தி அடைந்தவர்களாக இருக்க வேண்டும். இதற்கு, 12ம் வகுப்பு முடித்தவர்கள் <>இங்கு க்ளிக்<<>> செய்து 15.11.2025 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். அதன்பிறகு, நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!