News March 21, 2024
ராணிப்பேட்டை: திரளான கூட்டம்

ஆற்காடு பகுதியில் உள்ள அருள்மிகு அன்னபூரணி சமேத கங்காதர ஈஸ்வரர் ஆலயத்தில் பிரம்மோற்சவம் விழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் உற்சவர் பார்வதி சிவன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
Similar News
News September 16, 2025
ராணிப்பேட்டையில் வெளுத்து வாங்க போகும் கனமழை

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், அண்டை மாவட்டங்களான திருப்பத்தூர், வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வெளியே செல்பவர்கள் முன்னெச்சரிக்கையா இருங்க. ஷேர் பண்ணுங்க.
News September 16, 2025
ராணிப்பேட்டையில் கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000

ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு க்ளிக் செய்து அப்பளை செய்தால் போதும். மேலும் தகவல்கள் மற்றும் புகார்களுக்கு 9489048910, 044-22280920 அழையுங்கள். தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News September 16, 2025
ராணிப்பேட்டை எஸ்.பி கடும் எச்சரிக்கை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கஞ்சா, குட்கா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனையை முற்றிலும் ஒழிக்க தீவிர தணிக்கை மேற்கொள்ள எஸ்.பி. அய்மன் ஜமால் உத்தரவிட்டுள்ளார். மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டத்தில், சட்டவிரோத மணல் கடத்தல், சூதாட்டம், கள்ளச்சாராயம் மற்றும் லாட்டரி விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் அவர் அறிவுறுத்தினார்.