News April 10, 2025
ராணிப்பேட்டை: கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்

மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்தே கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அது மேலும் இன்று ஏப்ரல் 10, நாளை ஏப்ரல் 11 மேலும் 1 டிகிரி வெயில் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த தாக்கம் ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில் உணர முடியும் என்று தெரிவித்துள்ளது.
Similar News
News December 9, 2025
ராணிப்பேட்டையில் மின்தடை ஏற்படும் பகுதிகள்!

ராணிப்பேட்டை, ஆற்காடு கோட்டத்தைச் சேர்ந்த திமிரி, கலவை, ஆணைமல்லூர், தாமரைப்பாக்கம், புதுப்பாடி மற்றும் சென்னலேரி ஆகிய துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட சாத்தூர், மோசூர், பாலமதி, புங்கனூர், பழையனூர், சக்கரமல்லூர், கடபந்தாங்கல், கிளமபாடி, கீராம்பாடி, மாங்காடு, லாடாவரம், மேல்நெல்லி, வளையாத்தூர், மழையூர், பின்னந்தாங்கல் ஆகிய பகுதிகளில் இன்று(டிச.9) காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் தடை.
News December 9, 2025
ராணிப்பேட்டை: விபத்தில் வாலிபர் பரிதாப பலி!

ராணிப்பேட்டை: வன்னிவேடு மேம்பாலத்தில் இன்று(டிச.8) பைக் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மேம்பாலத்திலிருந்து வாலிபர் ஒருவர் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வாலாஜா போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். இறந்தவர் சரண்ராஜ் என்பது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News December 9, 2025
ராணிப்பேட்டையில் மக்கள் குறைதீர் கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் நேற்று(டிச.8) மொத்தம் 371 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா தலைமையில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்கள் பெறப்பட்டு கேட்டறியப்பட்டது. வருவாய், நிலம் மற்றும் நலத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு மனுக்களுக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.


