News November 24, 2024
ராணிப்பேட்டை காவல்துறையின் சார்பாக விழிப்புணர்வு

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பாக இன்று (24-11-2024) மாவட்ட மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள விழிப்புணர்வு செய்தியில், குடும்ப வன்முறை எதிர்கொண்டால் ஆலோசனை பெற உதவி எண் வெளியிடப்பட்டது. இதில் “நீங்களோ அல்லது உங்களுக்கு தெரிந்த ஒருவரோ குடும்ப வன்முறையை எதிர்கொண்டால், ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் பெற 181 என்ற உதவி எண்ணை அழைக்கவும்” என வாசகம் வெளியிடப்பட்டது.
Similar News
News July 6, 2025
இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ( ஜூலை 05) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது ராணிப்பேட்டை ஆற்காடு சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100
News July 5, 2025
ராணிப்பேட்டையில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் வட்டத்தில் உள்ள சிறிய மலை அருள்மிகு யோக ஆஞ்சநேய சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழாவையொட்டி, 07.07.2025 (திங்கட்கிழமை) அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது சோளிங்கர் வட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும். இந்த விடுமுறைக்கு ஈடாக 19.07.2025 (சனிக்கிழமை) அன்று வேலை நாள்.
News July 5, 2025
பொய்யான வேலை வாய்ப்பு விளம்பரங்களை நம்பாதீர்

இன்று 05.07.2025, ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையினர் வெளியிட்ட எச்சரிக்கையின்படி, பிரபல நிறுவனங்களின் பெயரால் பொய்யான வேலை வாய்ப்பு விளம்பரங்கள் வந்துகொண்டிருக்கின்றன. பின்னர் பதிவு/செயல்முறை கட்டணமாக பணம் கேட்டு சைபர் மோசடியில் ஈடுபடுகின்றனர். பொதுமக்கள் இதுபோன்ற ஏமாற்றங்களை தவிர எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மோசடிக்கு ஆளானால் உடனே 1930 எண்ணிற்கு புகார் அளிக்கலாம்.