News March 19, 2024
ராணிப்பேட்டை எஸ்.பி முக்கிய அறிவிப்பு

இராணிப்பேட்டை மாவட்டத்தில் தேர்தல் விதிமுறை மீறல் மற்றும் மதுவிலக்கு சம்மந்தமாக புகார்களை தெரிவிக்க இராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் தேர்தல்
காவல் கட்டுப்பாட்டு அறை கைபேசி எண் 93638 68465-ஐ
தொடர்பு கொண்டும்/Whatsapp மூலமாகவும் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D.V கிரண் ஸ்ருதி, இ.கா.ப., தெரிவித்துள்ளார்.
Similar News
News November 3, 2025
ராணிப்பேட்டை: இறந்தவர் உடலை அடக்கம் செய்யமுடியாமல் அவலம்

ராணிப்பேட்டை மாவட்டம், சோழிங்கநல்லூர் வட்டம், ரெண்டாடி பகுதியில் இறந்தவர்களை ஊருக்கு அருகில் உள்ள ஏரியில் அடக்கம் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் தற்போது பருவமழை காரணமாக ஏரி நிரம்பியுள்ளது. அதனால் இறந்தவர்களை அடக்கம் செய்ய முடியாமல் கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். பின்னர் ஊராட்சி அதிகாரி, விரைவில் உங்களுக்கு மயான காடு அமைக்கபடம் என மக்கள் முன்னிலையில் உறுதியளித்துள்ளார்.
News November 2, 2025
ராணிப்பேட்டை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (நவ.2) இரவு 10 மணி முதல் நாளை (நவ.3) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 2, 2025
ராணிப்பேட்டை: இருவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

ராணிப்பேட்டை மாவட்ட போலீசார், தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக செயல்பட்ட இருவரை, இன்று (நவ.2) குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். குற்றவாளிகள் கோபி (25) மற்றும் நிவாஸ் (24) மீது மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் குண்டர் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.


