News April 24, 2025
ராணிப்பேட்டை: ஆற்றுப்படுத்துநர் பணியிடம் அறிவிப்பு

ராணிப்பேட்டை அரசு குழந்தைகள் இல்லத்தில் தங்கியிருக்கும் சிறுவர்களுக்கான ஆற்றுப்படுத்துதல் சேவையை வழங்க, ஒப்பந்த அடிப்படையில் ஒரு ஆற்றுப்படுத்துநரை நியமிக்க மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. ஆற்றுப்படுத்துநர் பணியிடத்திற்கான விண்ணப்பங்களை ராணிப்பேட்டை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் நேரில் வழங்க வேண்டும். இதனை மே.9 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார் .
Similar News
News October 18, 2025
ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் (அக்-17) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள், தங்களது உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 17, 2025
ராணிப்பேட்டை: டாஸ்மாக் கடை முன்பு பெண்கள் போராட்டம்

அம்பரிஷிபுரம் ஊராட்சி ஜடேரி அருந்ததி பாளையம் பகுதியில் டாஸ்மாக் அரசு மது கடை இயங்கி வந்தது. இந்த கடையை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி பெண்கள் இன்று அக்டோபர் 17ம் தேதி கடை முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதைதொடர்ந்து டாஸ்மாக் மாவட்ட மேலாளர் உத்தரவின் பேரில் கடையில் இருந்த அனைத்து மது பாட்டில்களும் வேறு கடைக்கு மாற்றம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
News October 17, 2025
ராணிப்பேட்டை: 2,708 உதவிப் பேராசிரியர் வேலை.. APPLY NOW

தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2,708 உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. சம்பளமாக மாதம் ரூ.57,700 – ரூ.1,82,400 வரை வழங்கப்படும். மேலும் விண்ணப்பிக்க மற்றும் கல்வி தகுதிகள் குறித்து அறிய<