News June 27, 2024
ராணிப்பேட்டை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் அரக்கோணம் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, காரை மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் 5 ஆசிரியர் பணியிடங்கள் பள்ளி மேலாண்மை குழு மூலம் தொகுப்பு ஊதியத்தில் தற்காலிகமாக நிரப்பப்பட உள்ளது. மேலும் இதுகுறித்து விவரங்களுக்கு மாவட்ட ஆதிதிராவிடர் அலுவலரை ஜூலை 7 ஆம் தேதிக்குள் நேரில் தொடர்பு கொள்ளலாம் என்று ஆட்சியர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
Similar News
News October 31, 2025
ராணிப்பேட்டை வரும் துணை முதல்வர்

ராணிப்பேட்டை மாவட்ட திமுக இளைஞர் அணி ஆலோசனை கூட்டம் சிப்காட்டில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் ஆற்காடு எம்எல்ஏ ஈஸ்வரப்பன் தலைமையில் இன்று நடைபெற்றது. அமைச்சர் காந்தி கலந்துகொண்டு, வருகிற 3ம் தேதி தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு வருகை தரும்போது அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
News October 31, 2025
ராணிப்பேட்டை: ரயில்வேயில் 5,810 காலியிடங்கள்-APPLY HERE!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 5,810 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 1. வகை: மத்திய அரசு வேலை 2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி 3. ஆரம்ப நாள்: 21.10.2025 4. கடைசி தேதி : 20.11.2025, 5.சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400 6. வயது வரம்பு: 18 – 33 (SC/ST – 38, OBC – 36) 7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
News October 31, 2025
ராணிப்பேட்டை: மழையால் இடிந்த வீடு!

சோளிங்கர் வட்டம் வெங்குபட்டு கிராமம், பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சேகர். ஓட்டு வீட்டில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் (அக்.28) சேகர் தனது குடும்பத்தினருடன் வீட்டு வராண்டாவில் தூங்கிக் கொண்டிருந்தபோது, தொடர் மழை காரணமாக பூஜை அறையின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் அறையில் இருந்த பொருட்கள் மற்றும் டி.வி. சேதமானது. அதிர்ஷ்டவசமாக குடும்ப உறுப்பினர்கள் உயிர் தப்பினார்கள்.


