News August 18, 2024
ராணிப்பேட்டை ஆட்சியர் அறிவிப்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள திட்டமில்லா பகுதியில் அமையும் 2011 க்கு முன்னர் கட்டப்பட்ட அனுமதியற்ற கல்வி நிறுவன வரன்முறை திட்டத்திற்கு விண்ணப்பிக்க 2025 ஜனவரி 31ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு ராணிப்பேட்டை நகர் ஊரமைப்பு அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்
Similar News
News October 16, 2025
ராணிப்பேட்டை: தந்தை மகன் கிணற்றில் குதித்து தற்கொலை

வாலாஜா அருகே, IT ஊழியர் ஒருவர் கடிதம் எழுதி வைத்து மகனுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியள்ளது. காமராஜர் தெருவை சேர்ந்தவர் சுரேந்தர்(32) இவரது மகன் யாஷோ(6) பிறந்ததில் இருந்து மனவளர்ச்சி குன்றிய குழந்தை என்பதால், மனஉளைச்சலில் மகனுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். ‘என் மகனின் நிலைதான் இதற்கு காரணம்’ என கடிதத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
News October 16, 2025
ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அக்.16 இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News October 15, 2025
கூட்டுறவு கடன் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு

ராணிப்பேட்டை ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா இ.ஆ.ப., இன்று (அக்.15) கோடம்பாக்கம் ஊராட்சியிலுள்ள கூட்டுறவு கடன் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்கள். இச்சங்கத்தில் வழங்கப்பட்ட விவசாய கடன், நகை கடன், தனிநபர் கடன் குறித்த பதிவேடுகளையும், கடன் வசூலிக்கப்பட்ட விவரங்கள் குறித்தும் கேட்டறிந்தார்கள்.