News January 23, 2025
ராணிப்பேட்டை அருகே வாலிபர் எரித்துக்கொலை

நெமிலியை அடுத்த நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்த தமிழரசன், கடந்த 16ம் தேதி இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் பெட்ரோல் வீசி எரிக்கப்பட்டு படுகாயம் அடைந்தார். தொடர்ந்து, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Similar News
News October 26, 2025
ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அக்-25 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News October 25, 2025
ராணிப்பேட்டை: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000/- APPLY…!

டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள முதல் இரண்டு குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு மூன்று தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. <
News October 25, 2025
அரக்கோணம்: சிலிண்டர் வெடித்து விபத்து – அதிகாரிகள் விசாரணை

ராணிப்பேட்டை: கீழாந்தூர் கிராமம், பெரிய தெருவை சேர்ந்த அரிகிருஷ்ணன் என்பவரது வீட்டில் இன்று (அக்.25) காஸ் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. அதே நேரம் பொருட் சேதம் ஏற்பட்டுள்ளது. காஸ் சிலிண்டர் வெடி விபத்து குறித்து அரக்கோணம் வட்டாட்சியர் மற்றும் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.


