News March 29, 2024
ராணிப்பேட்டை அருகே கொள்ளை

ஆற்காடு அடுத்த தென் நந்தியாலம் எஸ்பி நகரைச் சேர்ந்தவர் சிட்டிபாபு. இவர் ஓய்வு பெற்ற உதவி பொறியாளர் .நேற்று சென்னையில் உறவினர் ஒருவர் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள சென்ற நிலையில் அவரது வீட்டின் பூட்டை உடைத்து 200 சவரன் நகை மற்றும் ரூபாய் 2 லட்சம் கொள்ளை போனது. ரத்தினகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
Similar News
News April 19, 2025
ராணிப்பேட்டையில் ஆதி மனிதர்களின் ரகசிய கல்குகை

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் ஆதிமனிதர்கள் வசித்த கல்குகை ஒன்று அமைந்துள்ளது. இங்கு செல்ல அடர்ந்த காட்டை கடக்க வேண்டும். சோளிங்கர் பெரிய மலைக்கு நேர் எதிரே அமைந்துள்ளது. இந்த குகையில் ஆதி மனிதர்கள் வாழ்ந்ததாக சொல்லப்படுகிறது. இது திருடன் குகை எனவும் அழைக்கப்படுகிறது. மலை உச்சியில் முழுக்க முழுக்க கற்களால் இந்த குகை கட்டப்பட்டுள்ளது. ட்ரெக்கிங் செல்ல இது ஒரு சிறந்த இடமாக உள்ளது.ஷேர் செய்யுங்கள்
News April 18, 2025
ராணிப்பேட்டை: பில்லி சூனிய பிரெச்சனையா இங்கு போங்க

ராணிப்பேட்டை அருகே வேலூர், சோளிங்கர் கொண்டபாளையத்தில் 108 திவ்ய வைணவ தலங்களில் ஒன்றான சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் உள்ளது. பராங்குச சோழன் கட்டிய 3ம் நூற்றாண்டு கோயில் இது. இங்கு ஒரு “கடிகை நேரம், ஒரு நாழிகை 4 நிமிடங்கள் இருந்தாலே மோட்சம் கிட்டிடும், பெருமை உடையது. பில்லி சூனியத்தை அடியோடு எடுக்கும் சிறப்பை பெற்றுள்ளது, பில்லி சூனியத்தால் அவதிப்படும் நபர்களுக்கு பகிரவும்.
News April 18, 2025
ராணிப்பேட்டையில் தனியார் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

ராணிப்பேட்டையில் இயங்கி வரும் Swap Development Solutions என்ற தனியார் நிறுவனத்தில் உதவியாளருக்கான 20 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. 10ஆம் வகுப்புக்கு கீழ் படித்திருந்தால் போதும். முன் அனுபவம் தேவை இல்லை. 18 – 40 வயதிற்குட்பட்ட இருபாலரும் வரும் ஜூன் 11ஆம் தேதிக்கு முன்னர் <