News November 24, 2024

ராணிப்பேட்டை அருகே உள்ள கோவிலுக்கு பிரபல நடிகர் வருகை 

image

108 திவ்ய தேசங்களில் ஒன்றான சோளிங்கர் ஸ்ரீ லஷ்மி நரசிம்ம சுவாமி ஆலயத்தில் கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு நேற்று புகழ்பெற்ற காமெடி நடிகர் யோகி பாபு ரோப்காரில் சென்று சாமி தரிசனம் செய்தார். அவருக்கு திருக்கோயிலின் சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்கள் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

Similar News

News November 25, 2025

ராணிப்பேட்டை: கஞ்சா விற்பனையில் ஒருவர் கைது

image

வாலாஜாவை அடுத்த அம்மூர் கூட்டு ரோட்டில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஆந்திராவைச் சேர்ந்த கோவிந்தா (30) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 1.2 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர். மேலும், வாலாஜா புலித்தாங்கல் பகுதியில் குட்கா விற்ற சங்கர் (57) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 105 பாக்கெட் குட்காவையும் பறிமுதல் செய்தனர். மேலும் பல்வேறு பகுதிகளில் சோதனை செய்து வருகின்றனர்.

News November 25, 2025

ராணிப்பேட்டை: ரூ.2.50 கோடி முறைகேடு ஊழியர் கைது!

image

ராணிப்பேட்டை, சோளிங்கர் எஸ்பிஐ வங்கியில் அசோசியேட்டாக குரு ராகவன்28 என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஓராண்டு காலமாக செலவின கணக்கிலிருந்து ரூ.2.50 கோடி முறைகேடு செய்துள்ளார். இதனை கண்டுபிடித்த வங்கி மேலாளர் சௌதன்யா ராணிப்பேட்டை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் நேற்று நவ.24ம் தேதி புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் கலையரசி வழக்கு பதிவு செய்து குரு ராகவனை கைது செய்தார்.

News November 25, 2025

ராணிப்பேட்டை: போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு!

image

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அமைந்துள்ள ரிஷஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் இன்று (நவ.24) நடந்த விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இது ஏராளமான குழந்தைகள் கலந்து கொண்டு போட்டிகளில் பங்கேற்றனர். இதில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் மற்றும் உதவியாளர் பணியாற்றிய சான்றிதழ்களை வழங்கினார்கள்.

error: Content is protected !!