News September 12, 2024

ராணிப்பேட்டை அமமுக தொண்டர்களுக்கு அழைப்பு

image

ராணிப்பேட்டை மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக வருகிற 15-ஆம் தேதி பேரறிஞர் அண்ணா 116-வது பிறந்த நாளை முன்னிட்டு காலை 9 மணி அளவில் சோளிங்கரில் உள்ள மாவட்ட தலைமை அலுவலகத்தில் பேரறிஞர் அண்ணா திருவுருவப்படத்திற்கு மாவட்ட கழக செயலாளர் என்.ஜூ. பார்த்திபன் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ள நிலையில் தொண்டர்கள் கலந்து கொள்ள வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளார்.

Similar News

News July 5, 2025

ராணிப்பேட்டையில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

image

இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் வட்டத்தில் உள்ள சிறிய மலை அருள்மிகு யோக ஆஞ்சநேய சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழாவையொட்டி, 07.07.2025 (திங்கட்கிழமை) அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது சோளிங்கர் வட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும். இந்த விடுமுறைக்கு ஈடாக 19.07.2025 (சனிக்கிழமை) அன்று வேலை நாள்.

News July 5, 2025

பொய்யான வேலை வாய்ப்பு விளம்பரங்களை நம்பாதீர்

image

இன்று 05.07.2025, ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையினர் வெளியிட்ட எச்சரிக்கையின்படி, பிரபல நிறுவனங்களின் பெயரால் பொய்யான வேலை வாய்ப்பு விளம்பரங்கள் வந்துகொண்டிருக்கின்றன. பின்னர் பதிவு/செயல்முறை கட்டணமாக பணம் கேட்டு சைபர் மோசடியில் ஈடுபடுகின்றனர். பொதுமக்கள் இதுபோன்ற ஏமாற்றங்களை தவிர எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மோசடிக்கு ஆளானால் உடனே 1930 எண்ணிற்கு புகார் அளிக்கலாம்.

News July 5, 2025

பத்திரப்பதிவு துறையின் ஆன்லைன் போர்டல் பற்றி தெரிஞ்சிக்கோங்க!

image

நிலம்/வீட்டின் பத்திரம் தொலைந்து விட்டால் கவலையே வேண்டாம். தாலுகா அலுவலகம் செல்லாமலே வீட்டில் இருந்தபடியே <>இந்த லிங்க்<<>> மூலம் விண்ணப்பித்து பத்திர நகலை பெற முடியும். பத்திரம் மட்டுமல்லாமல் உங்கள் சொத்து பற்றிய பட்டா, வில்லங்க சான்றிதழ் போன்ற விபரங்களையும் இதில் பெற முடியும். மேலும் தகவலுக்கு (9498452110) & ராணிப்பேட்டை மாவட்ட பதிவாளர் அலுவலகத்தை (04172-272242) அழைக்கலாம். அனைவருக்கும் பகிரவும்

error: Content is protected !!