News May 7, 2025

ராணிப்பேட்டை: அடிப்படை பிரச்சனையா கவலை வேண்டாம்!

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அடிப்படை பிரச்சனைகள் குறித்து புகார்கள் தெரிவிக்க ‘ஊராட்சி மணி’ அழைப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, சாலை வசதி, குடிநீர், தெருவிளக்கு, மின்சாரம் மற்றும் ரேஷன் கடைகள் குறித்தான புகார்களை 155340 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம். குறிப்பாக தற்போது கோடைகாலம் என்பதால் குடிநீர் பிரச்சனை இருந்தால் 1916 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

Similar News

News November 1, 2025

ராணிப்பேட்டையில் ‘தாயுமானவர் திட்டம்’ – ஆட்சியர் அறிவிப்பு!

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதியோர்கள், மாற்றுத்திறனாளி உறுப்பினர்கள் உள்ள 36,810 குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கும், தாயுமானவர் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரேஷன் பொருட்கள் எடுத்து சென்று வழங்கப்படுகிறது. அதன்படி இந்த மாதத்தில் வருகிற 3,4-ந் தேதிகளில் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்பட உள்ளது என ஆட்சியார் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

News November 1, 2025

ராணிப்பேட்டையில் தேசிய ஒருமைப்பாடு நிகழ்ச்சி

image

சர்தார் வல்லபாய் பட்டேல் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன்ஜமால் உத்தரவின் பேரில் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நேற்று (அக்.31) மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே ஒற்றுமை தேசிய ஒருமைப்பாடு தன்னார்வ குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் காவல்துறை அதிகாரிகள் ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

News November 1, 2025

ராணிப்பேட்டை: குழந்தைகளுக்கு இன்னலா – 1098!!

image

ராணிப்பேட்டை காவல்துறையினர் குழந்தை தொழிலுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இன்று (நவ.01) குழந்தைகளின் கனவுகள் சிதைக்காமல் கல்வி பெறும் உரிமையை பாதுகாக்கும் விதமாக போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். பின், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு 1098ஐ அழையுங்கள், எனவும் அறிவுறுத்தினார்.

error: Content is protected !!