News August 6, 2024
ராணிப்பேட்டை:வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை?

சோளிங்கர் தென் வன்னியர் தெருவை சேர்ந்தவர் ஜீவா. இவரது மனைவி தமிழ்ச்செல்வி (24). இவர்களுக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஐந்து மற்றும் இரண்டு வயதில் இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு தமிழ்ச்செல்வி வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இவர் வரதட்சணை கொடுமையால் இறந்தாரா என்ற கோணத்தில் சோளிங்கர் போலீசார் இன்று விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 24, 2025
BREAKING: ராணிப்பேட்டை- நீரில் மூழ்கி சிறுவன் பலி

ராணிப்பேட்டை, பனப்பாக்கம் அருகே உள்ள தனியார் நிறுவனத்தின் பில்லர் அமைப்பதற்காக தோண்டப்பட்ட 6 அடி பள்ளத்தில் தேங்கியிருந்த தண்ணீரில் இன்று (டிச.24) அப்பகுதியை சேர்ந்த மூன்றாம் வகுப்பு மாணவன் சந்தோஷ் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் மாணவனின் உறவினர்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். பள்ளி விடுமுறை விடப்பட்ட முதல் நாளே இப்படி ஒரு சம்பவம் அரங்கேறியது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
News December 24, 2025
ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை தினந்தோறும் எச்சரிக்கை பதிவு வெளியிட்டு வருகிறது. இன்றைய பதிவில், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. கதவுகள், ஜன்னல்கள் முறையாக பூட்டப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். அண்டை வீட்டார் சந்தேகத்துக்குரிய நபர்கள் குறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்க வேண்டும் என அறிவித்துள்ளது.
News December 24, 2025
ராணிப்பேட்டை: அரசு பஸ் மோதி பெண் பலி!

ராணிப்பேட்டை எஸ்.எம்.எச் மருத்துவமனை அருகில் இன்று (டிச.24) வாலாஜாவை சேர்ந்த செவிலியராக பணிபுரியும் கலைச்செல்வி என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென நிலை தடுமாறி ரோட்டில் கீழே விழுந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் தற்போது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


