News August 16, 2024
ராணிப்பேட்டையில் விண்ணப்பிக்கலாம்- ஆட்சியர்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தாட்கோ மூலமாக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு பிஎஸ்சி ஹாஸ்பிடாலிட்டி மற்றும் ஹோட்டல் அட்மினிஸ்ட்ரேஷன் 3 வருட முழுநேர பட்டப் படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விரும்புவோர் தாட்கோ இணையதளத்தில் வரும் 18 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் சந்திரகலா இன்று தெரிவித்துள்ளார்.
Similar News
News December 13, 2025
ராணிப்பேட்டை: ஆடு, கோழி பண்ணை அமைக்க விருப்பமா?

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் nlm.udyamimitra.in என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பித்து கொள்ளலாம். ( SHARE )
News December 13, 2025
ராணிப்பேட்டை: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகியோ விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க
News December 13, 2025
ராணிப்பேட்டை பெல் நிறுவனத்தில் வேலை! APPLY

ராணிப்பேட்டையில் உள்ள பெல் நிறுவனத்தில் 100 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வெல்டர், ஃபிட்டர், எலக்ட்ரீசியன் உள்ளிட்ட ரூ.12,000 உதவித்தொகை உடன் கூடிய அப்ரண்டிஸ் பயிற்சி பணிகளுக்கு நேர்முக தேர்வு நடைபெற உள்ளது. இதற்கு வெல்டர் ஃபிட்டர் எலக்ட்ரீசியன் பிரிவுகளில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் வருகின்ற டிச.15ஆம் தேதி நேர்முக தேர்வில் கலந்து கொள்ளவும். (SHARE)


