News August 8, 2024
ராணிப்பேட்டையில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாகவே இம்மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News October 23, 2025
ராணிப்பேட்டை மக்களே இதை தெரிஞ்சிக்கோங்க!

ராணிப்பேட்டை மாவட்டம் மழைக்காலங்களில் புயல் அடடித்தால், மின் கம்பிகள் அருந்து விழுந்தால் அல்லது மழைநீர் தேங்கியுள்ள இடங்களில் மின்கம்பிகள் அறுந்து கிடப்பதை பார்த்தாலோ உடனடியாக ராணிப்பேட்டை மின்துறை உதவி எண்களை தொடர்ந்து தங்கள் புகாரை அழிக்கலாம். அதன்படி 9487899841,9487899842, 9487899843,9487899844, 9498794887 ஆகிய எண்களை 24 நேரமும் தொடர்பு கொள்ளவும்.
News October 23, 2025
ராணிப்பேட்டை: குறைந்த விலையில் வாகனம் வாங்கணுமா?

ராணிப்பேட்டை மாவட்டத்தில் போதைப்பொருள் குற்றத்தடுப்பு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் ஏலம் விடப்படுகிறது. அக்.30ம் தேதி காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை ராணிப்பேட்டை ஆயுதப்படை தலைமை மைதானத்தில் ஏலம் விடப்படுகிறது. நான்கு இரு சக்கர வாகனங்கள் இரண்டு இரு சக்கர வாகனங்கள் ஏலம் விடப்பட உள்ளது. விவரங்களுக்கு ஆயுதப்படை தலைமை அலுவலகத்தை அணுகலாம் என்று எஸ் பி அய்மன் ஜமால் தெரிவித்துள்ளார்
News October 23, 2025
மழை பாதிப்பு வாட்ஸ் அப்பில் தெரிவிக்கவும் ஆட்சியர் அறிவிப்பு

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மழைக்கால பிரச்சனைகளை வாட்ஸ் அப்பில் தெரிவியுங்கள். மழை காலங்கள் மற்றும் புயல் வீசும் நேரங்களில் நிகழும் சம்பவங்களை அவ்வப்போது படம் பிடித்து அல்லது வீடியோவாக பதிவு செய்து 8300929401 என்ற whatsapp எண்ணில் தொடர்பு கொள்ளலாம். *தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க*