News September 28, 2024

ராணிப்பேட்டையில் மழைக்கு வாய்ப்பு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்க பகுதியில் மழை பெய்கிறதா என்பதை கமெண்டில் சொல்லுங்க

Similar News

News December 21, 2025

ராணிப்பேட்டை: வீட்டில் பதுக்கி மது விற்றவர் கைது!

image

அரக்கோணம் அடுத்த பருத்திப்புத்தூர் பகுதியில் தாலுகா போலீசார் நடத்திய ரோந்து பணியின் போது, சட்டவிரோதமாக மது விற்ற செல்வராஜ் (49) என்பவரைக் கைது செய்தனர். டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி, வீட்டில் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்றது விசாரணையில் தெரியவந்தது. அவரிடமிருந்து 95 மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்த போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 21, 2025

ராணிப்பேட்டை: கிணற்றில் தவறி விழுந்த மாணவி பலி

image

வாலாஜாபேட்டை அடுத்த ஏடாகுப்பம் பகுதியை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவி சவிதா. நேற்று (டிச.20) சனிக்கிழமை விடுமுறை என்பதால் தனது தாயுடன் அருகில் ஆடு மேய்ப்பதற்காக சென்றுள்ளார். மகள் சென்று வெகு நேரம் ஆகியும் திரும்பி வராததால் உறவினர்கள் தேடுதலில் ஈடுபட்டனர். அப்போது அருகில் இருந்த விவசாய கிணற்றில் சவிதாவின் உடல் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 21, 2025

ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்!

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணி முதல், இன்று (டிச.21) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!