News August 7, 2024
ராணிப்பேட்டையில் மழைக்கு வாய்ப்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக கடலோர மேல் வளிமண்ட சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று இரவு அரக்கோணம் , ஆற்காடு, வாலாஜா பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
Similar News
News November 26, 2025
ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (நவ-26) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர், பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது
News November 26, 2025
ராணிப்பேட்டையில் வாக்காளர் உதவி மையங்கள் ஆய்வு

ராணிப்பேட்டை ஆட்சியர் மற்றும் தேர்தல் அலுவலர் டாக்டர் ஜே.யு.சந்திரகலா (நவ.26) ராணிப்பேட்டை தொகுதிக்குட்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அமைக்கப்பட்ட வாக்காளர் உதவி மையங்களை ஆய்வு செய்தார். வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியில், வாக்காளர் விண்ணப்பங்களை எளிதில் பெற உதவி மையங்கள் செயல்படுவதைப் பரிசோதித்து தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கினார்.
News November 26, 2025
ராணிப்பேட்டை: ஒரு நொடியில் உங்கள் பட்டா விவரங்கள் அறியலாம் !

ராணிப்பேட்டை மக்களே நிலங்களின் பட்டா விவரங்களை அறிய உங்கள் போனில் லொக்கேஷனை ஆன் செய்துவிட்டு AAVOT.COM என்ற இணையதளம் செல்லுங்கள். அதில் இருக்கும், SEARCH BOX-ல் NILAM என டைப் செய்து அதன் பிறகு Check Land என்பதை க்ளிக் செய்தால் உடனடியாக நீங்கள் இருக்கும் இடத்தின் விவரங்களை அறிந்து கொள்ளலாம். <


