News April 24, 2025
ராணிப்பேட்டையில் பேச்சுப் போட்டி அறிவிப்பு

ராணிப்பேட்டை மாவட்ட ஆளுநரகத்தின் சார்பில் செம்மொழி நாள் விழாவை முன்னிட்டு, “செம்மொழியின் சிறப்பு மற்றும் முத்தமிழின் கலாச்சாரம்” என்ற தலைப்பில் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் 09.05.2025 மற்றும் 10.05.2025 ஆகிய தேதிகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக நடைபெறவுள்ளன. இந்த நிகழ்வில் மாநில அளவில் 150 மாணவர்கள் தேர்வுசெய்யப்படுவர். மேலும் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படும்.
Similar News
News July 5, 2025
ராணிப்பேட்டையில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் வட்டத்தில் உள்ள சிறிய மலை அருள்மிகு யோக ஆஞ்சநேய சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழாவையொட்டி, 07.07.2025 (திங்கட்கிழமை) அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது சோளிங்கர் வட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும். இந்த விடுமுறைக்கு ஈடாக 19.07.2025 (சனிக்கிழமை) அன்று வேலை நாள்.
News July 5, 2025
பொய்யான வேலை வாய்ப்பு விளம்பரங்களை நம்பாதீர்

இன்று 05.07.2025, ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையினர் வெளியிட்ட எச்சரிக்கையின்படி, பிரபல நிறுவனங்களின் பெயரால் பொய்யான வேலை வாய்ப்பு விளம்பரங்கள் வந்துகொண்டிருக்கின்றன. பின்னர் பதிவு/செயல்முறை கட்டணமாக பணம் கேட்டு சைபர் மோசடியில் ஈடுபடுகின்றனர். பொதுமக்கள் இதுபோன்ற ஏமாற்றங்களை தவிர எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மோசடிக்கு ஆளானால் உடனே 1930 எண்ணிற்கு புகார் அளிக்கலாம்.
News July 5, 2025
பத்திரப்பதிவு துறையின் ஆன்லைன் போர்டல் பற்றி தெரிஞ்சிக்கோங்க!

நிலம்/வீட்டின் பத்திரம் தொலைந்து விட்டால் கவலையே வேண்டாம். தாலுகா அலுவலகம் செல்லாமலே வீட்டில் இருந்தபடியே <