News April 24, 2025
ராணிப்பேட்டையில் பேச்சுப் போட்டி அறிவிப்பு

ராணிப்பேட்டை மாவட்ட ஆளுநரகத்தின் சார்பில் செம்மொழி நாள் விழாவை முன்னிட்டு, “செம்மொழியின் சிறப்பு மற்றும் முத்தமிழின் கலாச்சாரம்” என்ற தலைப்பில் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் 09.05.2025 மற்றும் 10.05.2025 ஆகிய தேதிகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக நடைபெறவுள்ளன. இந்த நிகழ்வில் மாநில அளவில் 150 மாணவர்கள் தேர்வுசெய்யப்படுவர். மேலும் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படும்.
Similar News
News November 16, 2025
ராணிப்பேட்டை: பிரபல ரவுடி குண்டர் சட்டத்தில் கைது!

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், சுரேஷ்குமார் (28) என்பவர் தொடர்க்குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால்- உத்தரவின் பேரில், சுரேஷ்குமார் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
News November 16, 2025
ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர், பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது
News November 15, 2025
காவல் நிலையத்தில் திடீர் காவல் கண்காணிப்பாளர் ஆய்வு

இன்று (நவ.15) அரக்கோணம் உட்கோட்டத்திலுள்ள தக்கோலம் காவல் நிலையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் திடீர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், அங்கு பராமரிக்கப்படும் பதிவேடுகள் மற்றும் வழக்கு கோப்புகளை பார்வையிட்டும் பணியிலிருந்த அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு தக்க அறிவுரை வழங்கினார்.


