News August 3, 2024
ராணிப்பேட்டையில் புதிய திட்ட இயக்குனர் பொறுப்பேற்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தின் ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனராக பணியாற்றி வந்த லோகநாயகி செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குனராக மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக ராணிப்பேட்டையில் புதிய ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனராக ஜெயசுதா இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோப்புகளில் கையெழுத்திட்டு பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
Similar News
News December 1, 2025
ராணிப்பேட்டை: கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆர்.காந்தி!

ராணிப்பேட்டை மாவட்டம், வன்னிவேடு கிராமம் அருள்மிகு ஶ்ரீபுவனேஸ்வரி அம்பாள் உடனுறை ஸ்ரீஅகத்தீஸ்வரர் திருக்கோயிலில், இன்று (டிச.01) கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தில் சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். உடன் திமுக மாநில சுற்றுச்சூழல் அணி துணைச் செயலாளர் வினோத் காந்தி மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
News December 1, 2025
BREAKING: ராணிப்பேட்டைக்கு ஆரஞ்சு அலெர்ட்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மிகக் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் தற்போது (டிச.01) வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ராணிப்பேட்டை மற்றும் அருகிலுள்ள சில பகுதிகளில் கனமழை முதல் அதி கனமழை வரை பெய்யக்கூடும். இதை தொடர்ந்து, மக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவசர காலங்களில் உதவிக்கு அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
News December 1, 2025
ராணிப்பேட்டை: 12 உயிர்களை காப்பாற்றி உயிரிழந்த ஓட்டுநர்!

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு மகாலட்சுமி கல்லூரி பேருந்து ஓட்டுனர் ரவி, (டிச.01) 12 மாணவிகளை பேருந்தில் ஏற்றுக்கொண்டு ஜம்புகுளம் அருகே பேருந்து ஓட்டி வரும்போது, பேருந்தை சாதுரியமாக சாலை ஓர பள்ளத்தில் இறக்கிவிட்டு மயங்கி விழுந்து உள்ளார். பின், அருகில் இருந்தவர்கள் பேருந்தில் இருந்த மாணவிகளை சிறுகாயம் இன்றி பத்திரமாக மீட்டனர். பின், தகவல் அறிந்த போலீசார் நேரில் வந்துபோது ஓட்டுநர் இறந்து கிடந்தார்.


