News April 10, 2025
ராணிப்பேட்டையில் பயிற்றுநர் வேலை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் குத்துச்சண்டை பயிற்சி மையம் துவங்கப்பட உள்ளது. பயிற்றுநர் தேர்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர் 50 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பிக்க விரும்புவோர் dsorpt@gmail.com என்ற மின்னஞ்சல் வழியாக அல்லது மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆட்சியர் அலுவலகம் என்ற முகவரிக்கு ஏப்ரல் 20 ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
Similar News
News November 1, 2025
ராணிப்பேட்டை: இரவு ரோந்து போலீசார் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (நவ.1) இரவு 10 மணி முதல் நாளை (நவ.2) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!
News November 1, 2025
ராணிப்பேட்டையில் மராத்தான் போட்டி!

வாலாஜாவில் இன்று (நவ.1) தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ராணிப்பேட்டை மாவட்ட பிரிவு சார்பாக ஃபிட் இந்தியா ஃபிரீடம் ரன் மினி மரத்தான் 6.0 அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இப்போட்டியில் தனியார் பயிற்சி மையம் மாணவர்கள் மற்றும் கேலோ இந்தியா பயிற்சி மையம் மாணவர்கள் 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் ஞானசேகரன் கலந்து கொண்டார்.
News November 1, 2025
ராணிப்பேட்டையில் ‘தாயுமானவர் திட்டம்’ – ஆட்சியர் அறிவிப்பு!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதியோர்கள், மாற்றுத்திறனாளி உறுப்பினர்கள் உள்ள 36,810 குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கும், தாயுமானவர் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரேஷன் பொருட்கள் எடுத்து சென்று வழங்கப்படுகிறது. அதன்படி இந்த மாதத்தில் வருகிற 3,4-ந் தேதிகளில் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்பட உள்ளது என ஆட்சியார் சந்திரகலா தெரிவித்துள்ளார்.


