News January 24, 2025
ராணிப்பேட்டையில் நாளை பொது விநியோக திட்ட சிறப்பு முகாம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது விநியோக திட்டம் சார்பில் சிறப்பு முகாம் நாளை (25ம் தேதி) அந்தந்த வட்ட வழங்கல் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இம்முகாமில் மின்னணு குடும்ப அட்டையில் முகவரி மாற்றம், பெயர் திருத்தம், பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கல், செல்போன் எண் மாற்றம், புதிய ரேஷன் அட்டை போன்றவை மாற்றம் இருப்பின் இந்த சிறப்பு முகாமில் மனு செய்து பயன்பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 13, 2025
ராணிப்பேட்டையில் 4,406 பேருக்கு பாதிப்பு… எச்சரிக்கை

சென்னை போன்ற குறிப்பிட்ட மாநகராட்சிகளை தவிர, மற்ற நகர்ப்புற & ஊரக பகுதிகளில் தெரு நாய்கள் கணக்கெடுப்பு தொடர்பாக எந்த நடவடிக்கையும் இல்லை. தமிழ்நாட்டில் 25 லட்சம் தெருநாய்கள் இருக்கலாம் என கால்நடை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஜனவரி மாதம் முதல் ஜூன் வரை ராணிப்பேட்டையில் 4,406 பேர் நாய்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் ரேபிஸ் தொற்றால் உயிரிழந்துள்ளார். எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருங்கள்!
News August 13, 2025
சுதந்திர தினத்தன்று மதுபானக் கடைகள் மூடப்படும்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15 அன்று அனைத்து மதுபான கடைகளும் மூடப்பட்டிருக்கும் என்று மாவட்ட ஆட்சியர் ஜே யூ சந்திரகலா உத்தரவிட்டுள்ளார் மேலும் அந்த நாளில் எந்த விதமான மதுபான விற்பனையும் நடைபெறக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார் பொதுமக்கள் அமைதியாகவும் ஒழுங்காகவும் சுதந்திர தினத்தை கொண்டாட மாவட்ட நிர்வாகம் ஏற்பாடுகளை செய்துள்ளது
News August 12, 2025
இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( ஆகஸ்ட் -12) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது ராணிப்பேட்டை ஆற்காடு சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100