News April 23, 2025
ராணிப்பேட்டையில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு சாலை பழைய பிஎஸ்என்எல் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் ஏப்ரல் 25 ஆம் தேதி, காலை 10 மணிக்கு தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த வேலை வாய்ப்பு முகாமில் 8ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு +2, பட்டப்படிப்புகள், ஐடிஐ, டிப்ளமோ, நர்சிங், மற்றும் பி.இ படித்தவர்கள் பங்கேற்கலாம்.
Similar News
News December 8, 2025
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மின் தடை

ஆற்காடு கோட்டத்தைச் சேர்ந்த திமிரி, கலவை, ஆணைமல்லூர், தாமரைப்பாக்கம், புதுப்பாடி மற்றும் சென்னலேரி ஆகிய துணை மின் நிலையங்களைச் சேர்ந்த பகுதிகளான சாத்தூர், மோசூர், பாலமதி, புங்கனூர், பழையனூர், சக்கரமல்லூர், கடபந்தாங்கல், கிளமபாடி, கீராம்பாடி, மாங்காடு, லாடாவரம். மேல்நெல்லி, வளையாத்தூர், மழையூர், பின்னந்தாங்கல் ஆகிய பகுதிகளில் நாளை(டிச.9) காலை 9 – மாலை 5 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
News December 8, 2025
ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (டிச7) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க..
News December 7, 2025
ராணிப்பேட்டை: தடையை மீறி ஆர்ப்பாட்டம் இந்து முன்னணியினர் கைது!

ராணிப்பேட்டை வாலாஜா பேருந்து நிலையத்தில் இன்று டிச.7ம் தேதி போலீஸ் அனுமதி இன்றி இந்து முன்னணியினர் போராட்டம் நடத்த முயன்றனர். ‘திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றுவதற்கு அரசு தடை விதித்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.’ மேலும், பேருந்து நிலையத்தில் போலீசார் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.


