News April 23, 2025
ராணிப்பேட்டையில் சம்பவ இடத்தில் பலியான போலீஸ்

ராணிப்பேட்டை மாவட்டம் கொடைக்கல் அருகே நேற்று இருசக்கர வாகனத்தில் அதிகவேகமாக பயணித்த போது, வாகனம் கட்டுப்பாட்டை இழந்து புளியமரத்தில் மோதி நிகழ்ந்த விபத்தில் காவலர் திலீப் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திலீப், ஆவடியில் பட்டாலியன் போலீஸாக பணியாற்றி வந்தார். உயிரிழந்த அவர் சோளிங்கரை அடுத்த கீழாண்டை மோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர். இந்த சம்பவம் அவரது குடும்பத்தினருக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News July 11, 2025
உலக இளைஞர் திறன் தின நாள் கொண்டாடப்படும்

ராணிப்பேட்டை மாவட்டம் ஜூலை 15 வரை தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் உலக இளைஞர் திறன் தின நாள் மாவட்டம் முழுவதும் கொண்டாட உள்ளதாக ஆட்சியர் ஜெ.யூ. சந்திரகலா தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தின் இரண்டாவது வாரத்தை இந்த விழிப்புணர்வு வாரமாக அனுசரித்து கொண்டாட உள்ளது என்றும் தெரிவித்தார்.
News July 11, 2025
குரூப் 4 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு…

▶ராணிப்பேட்டையில் நாளை (ஜூலை 12) குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது.
▶தேர்வு எழுத ஹால் டிக்கெட் (HALL TICKET) கட்டாயம்.
▶ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை (ஏதேனும் ஒன்று) அவசியம்.
▶கருப்பு மை கொண்ட பேனா மட்டுமே அனுமதி.
▶காலை 9 மணிக்குள்ளேயே தேர்வறைக்குள் செல்ல வேண்டும்.
▶வாட்ச், மோதிரம், பெல்ட் அணிய கூடாது.
தேர்வு எழுதும் அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
News July 11, 2025
காவல்துறை சார்பாக உலக மக்கள் தொகை குறித்து

ராணிப்பேட்டை காவல்துறை சார்பாக இன்று சமூகவலைதளத்தில் வெளியிடப்பட்டது என்னவென்றல் இன்று உலக மக்கள் தொகை நாள், உலக மக்கள் தொகை நாள் என்பது ஆண்டுதோறும் ஜூலை 11 மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வை உலகளாவிய ரீதியில் மக்களுக்கு எடுத்துச் செல்லும், ஒரு முயற்சியாக ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தினால் கொண்டாடப்பட்டு வருகிறது. 1987ஆம் ஆண்டில் இதே நாளிலேயே உலக மக்கள் தொகை ஐந்து பில்லியனைத் தாண்டியது.