News April 23, 2025

ராணிப்பேட்டையில் சம்பவ இடத்தில் பலியான போலீஸ்

image

ராணிப்பேட்டை மாவட்டம் கொடைக்கல் அருகே நேற்று இருசக்கர வாகனத்தில் அதிகவேகமாக பயணித்த போது, வாகனம் கட்டுப்பாட்டை இழந்து புளியமரத்தில் மோதி நிகழ்ந்த விபத்தில் காவலர் திலீப் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திலீப், ஆவடியில் பட்டாலியன் போலீஸாக பணியாற்றி வந்தார். உயிரிழந்த அவர் சோளிங்கரை அடுத்த கீழாண்டை மோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர். இந்த சம்பவம் அவரது குடும்பத்தினருக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News December 6, 2025

ராணிப்பேட்டை:கால்வாயில் விழுந்த மாடு பலி!

image

ராணிப்பேட்டை: மேல்நாயகன்பாளையம் பஜனை கோயில் தெருவைச் சேர்ந்த பொன்னுசாமி என்பவருக்கு சொந்தமான காளை மாடு நேற்று (டிச.5) அங்குள்ள ஏரி கால்வாயில் விழுந்து இறந்தது. வருவாய்த்துறை மற்றும் திமிரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, போலீசார் கால்நடை மருத்துவரை அழைத்து பிரேத பரிசோதனை செய்வதற்கு நடவடிக்கை எடுத்தனர்.

News December 6, 2025

வாலாஜாவில் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது

image

வாலாஜா நகராட்சியில் தூய்மை பணியாளர் ஏரம்மாள் இவருக்கு சம்பளம் ரூ.2% லட்சம் நிலுவையில் இருந்தது. இவருடன் பணியாற்றி வரும் 7 பேருக்கு நிலுவை பணம் வழங்கப்பட்டது.அப்போது நகராட்சி அலுவலகத்தில் கணக்காளரான தேவராஜ் (55) நிலுவை பணத்தை வழங்க ஏரம்மாளிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என கேட்டுள்ளார். அவர் அளித்த புகாரின்படி, லஞ்ச ஒழிப்பு போலீசார் தேவராஜ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News December 6, 2025

ராணிப்பேட்டை:ஏரிக்கால்வாயில் தவறி விழுந்த மாடு பலி!

image

ராணிப்பேட்டை: மேல்நாயகன்பாளையம் பஜனை கோயில் தெருவைச் சேர்ந்த பொன்னுசாமி என்பவருக்கு சொந்தமான காளை மாடு இன்று(டிச.5) அங்குள்ள ஏரி கால்வாயில் விழுந்து இறந்தது. வருவாய்த்துறை மற்றும் திமிரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, போலீசார் கால்நடை மருத்துவரை அழைத்து பிரேத பரிசோதனை செய்வதற்கு நடவடிக்கை எடுத்தனர்.

error: Content is protected !!