News October 23, 2024
ராணிப்பேட்டையில் குறைதீர் கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக் கொண்டு உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதில் துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேசன், மாவட்ட தனி பிரிவு காவல் ஆய்வாளர் அருண்குமார் மற்றும் காவல் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Similar News
News October 29, 2025
ராணிப்பேட்டை: கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்றுவது எப்படி!

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் அதற்கு தனிப் பட்டா பெற நிலத்தை பகிர்ந்து தனியாக மாற்ற வேண்டும். பின்னர்,
1. கூட்டு பட்டா
2. விற்பனை சான்றிதழ்
3. நில வரைபடம்
4. சொத்து வரி ரசீது
5. மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம்
இந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்த பின், 30-60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்கள்.
News October 29, 2025
ராணிப்பேட்டையில்: விவசாயிகள் கவனத்திற்கு

ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற அக்.30ஆம் தேதி காலை 11 மணி அளவில் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடக்கவுள்ளது. எனவே ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் பிரச்சினைகளை களைந்திட கூட்டத்தில் கலந்து கொண்டு பொதுப்பிரச்சனைகளை கோரிக்கை வாயிலாகவும் தனிநபர் பிரச்சினைகளை மக்கள் வாயிலாகவும் தெரிவிக்கலாம் என ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
News October 29, 2025
அரசு பஸ் டிரைவர் ஆற்று கால்வாயில் மூழ்கி பலி

கீழ்வெண்பாக்கம் கிராமம் பள்ளத் தெருவை சேர்ந்தவர் ரவி 56 அரசு பஸ் டிரைவர் இவர் இன்று அக்.28ஆம் தேதி அங்குள்ள ஆற்றுக்கால்வாயில் இயற்கை உபாதைக்காக சென்றுள்ளார். அப்போது கால்வாயில் தவறி விழுந்தார். அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே ரவி இறந்து விட்டதாக தெரிவித்தார். நெமிலி போலீசார் விசாரிக்கின்றனர்.


