News April 19, 2025
ராணிப்பேட்டையில் இடி, மின்னலுடன் மழை!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (ஏப்ரல் 19) இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் அவசியமான முன்னெச்சரிக்கைகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறுகிய நேரத்தில் கனமழை பெய்யும் சாத்தியம் உள்ளதால் அவசர தேவைகள் இல்லாமல் வெளியே செல்லாமல் இருக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
Similar News
News December 8, 2025
ராணிப்பேட்டை: 10ஆவது படித்தால் மத்திய அரசு வேலை

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே.., மத்திய பணியாளர் தேர்வாணையம்(SSC) காலியாக உள்ள 25487 Constable பணிக்கான காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க 10ஆவது படித்திருந்தால் போதுமானது. இதற்கு மாதம் ரூ.21,700 சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க டிச.31ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <
News December 8, 2025
ராணிப்பேட்டை ஆட்சியர் வேண்டுகோள்

நாட்டைக் காக்கும் படைவீரர் நலனுக்காக கொடி நாள் நிதியை தாராளமாக வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா வேண்டுகோள் விடுத்தார். படைவீரர் கொடிநாள் 2025 நிதி சேகரிப்பை உண்டியல் மூலம் நிதி செலுத்தி தொடங்கி வைத்தார். வீரமரணம் எய்தியவர்களின் குடும்பம், ஊனமுற்ற முன்னாள் படைவீரர்கள் உள்ளிட்ட 615 பேருக்கு ரூ.1.19 கோடி மதிப்பிலான பொன்னாடை, திருமண நிதி, கல்வி உதவி உள்ளிட்ட நலனுதவிகள் வழங்கப்பட்டன.
News December 8, 2025
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மின் தடை

ஆற்காடு கோட்டத்தைச் சேர்ந்த திமிரி, கலவை, ஆணைமல்லூர், தாமரைப்பாக்கம், புதுப்பாடி மற்றும் சென்னலேரி ஆகிய துணை மின் நிலையங்களைச் சேர்ந்த பகுதிகளான சாத்தூர், மோசூர், பாலமதி, புங்கனூர், பழையனூர், சக்கரமல்லூர், கடபந்தாங்கல், கிளமபாடி, கீராம்பாடி, மாங்காடு, லாடாவரம். மேல்நெல்லி, வளையாத்தூர், மழையூர், பின்னந்தாங்கல் ஆகிய பகுதிகளில் நாளை(டிச.9) காலை 9 – மாலை 5 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.


