News March 24, 2025

ராணிப்பேட்டையில் ஆந்திர இளைஞர்கள் 2 பேர் விபத்தில் பலி

image

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தை சேர்ந்த சேஷாசலம் (29), நாகேந்திரன் (31). இருவரும் நேற்று மாலை பைக்கில் திருவண்ணாமலை சென்று திரும்பும் போது சிப்காட் அருகே வந்த கண்டெய்னர் லாரி மோதியதில் இருவரும் கீழே விழுந்தனர். பின்னால் வந்த கார் இவர்கள் மீது ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே பலியாயினர். சிப்காட் போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

Similar News

News December 3, 2025

BREAKING: ராணிப்பேட்டையில் இந்த பள்ளிகளுக்கு விடுமுறை

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம், நெமிலி வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிச.3) விடுமுறை அளித்து என மாவட்ட ஆட்சியர் தற்போது அறிவித்துள்ளார். மாணவர்களின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. உங்க எரியா மழை நிலவரம் குறித்து கமெண்ட் பண்ணுங்க!

News December 3, 2025

ராணிப்பேட்டை: தாய் வீட்டுக்கு சென்று திரும்பிய பெண் சாவு!

image

நெமிலி டவுன் பகுதியை சேர்ந்தவர் புவனேஸ்வரி (27). இவர் நேற்று முன்தினம் திருத்தணியில் உள்ள தன் தாய் வீட்டுக்கு சென்று விட்டு நேற்று வீடு திரும்பினார். இந்நிலையில் வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார். அவரை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு புவனேஸ்வரியை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். நெமிலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News December 3, 2025

ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்!

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் – நாளை (டிச.02) காலை வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!