News August 4, 2024
ராணிப்பேட்டையில் அதிரடி மாற்றம்

வேலூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட மாவட்டங்களான வேலூர், திருப்பத்தூர். திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களளில் பணி புரியும் 45 காவல் ஆய்வாளர்கள் பல்வேறு காரணங்களுக்காக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை வேலூர் சரக டி.ஐ.ஜி சரோஜ் குமார் தாக்கூர் நேற்று வெளியிட்டுள்ளார். ,மேலும், அந்ததந்த மாவட்ட எஸ்பி-க்கள் மாற்றம் பெற்றவர்களுக்கு ஆணையை வழங்குமாறு தெரிவித்துள்ளார்.
Similar News
News November 28, 2025
ஆற்காடு அருகே குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை

இன்று ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி ராஜேஷ் வயசு 31 என்பவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ 2000 அபராதம் என ராணிப்பேட்டை முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தால் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இவ்வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் எஸ்பி பாராட்டினார்
News November 28, 2025
ராணிப்பேட்டை மாவட்ட மக்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை!

ராணிப்பேட்டை மாவட்டம் வங்க கடலில் உருவான, புயல் காரணமாக வருகின்ற (நவ.29 மற்றும் நவ.30) சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அதிக கன மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் தாழ்வான பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுக்கப்படுகிறார்கள் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரகலா செய்தியை வெளியிட்டுள்ளார்.
News November 28, 2025
ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர், பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது


