News April 16, 2025

ராஜேந்திரபாலாஜி மீது ஆன்லைன் மூலம் குற்றப்பத்திரிக்கை தாக்கல்

image

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்ததாக விஜய் நல்லதம்பி, ரவீந்திரன் அளித்த புகாரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது தனித்தனியாக இரு வழக்குகள் பதிவு செய்தனர். மேல்விசாரணைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுமதியளித்த நிலையில் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்.2ல்ஆன்லைன் மூலம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.

Similar News

News November 16, 2025

விருதுநகர்: 10th தகுதி.. எய்ம்ஸ்-ல் வேலை ரெடி!

image

விருதுநகர் மக்களே, எய்ம்ஸ் மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 1383 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18-40 வயதிற்கு உட்பட்ட 10, 12, டிப்ளமோ, டிகிரி, B.E., முடித்தவர்கள் டிச. 2-க்குள் இங்கு <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்க வேண்டும். சம்பளம் – ரூ.18,000 – ரூ.1,51,100 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். இப்பயனுள்ள தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க.

News November 16, 2025

விருதுநகர்: கொலை செய்யபட்டவர் தலை ஓடையில் கண்டெடுப்பு

image

மதுரை மாவட்டம், பெரிய உலகாணியைச் சேர்ந்த ஜே.சி.பி., டிரைவர் மணிகண்டன் கொலை வழக்கில் அவரது தலை ஒடையில் இருந்த கண்டெடுக்கப்பட்டது. பணம் வாங்கி தராததால் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்ட மணிகண்டனின் 33, உடல் கிடைத்தது. தலை மாயமானது. இந்நிலையில் போலீசார், தீயணைப்பு துறையினர் நேற்று ஓடையில் கண்டுபிடித்தனர்.மேலும், இது தொடர்பாக கொக்குளம் மதன்ராஜ் 19, என்பவரை போலீசார் கைது செய்து விசாரிக் கின்றனர்.

News November 16, 2025

விருதுநகர் அருகே தலைகுப்பிற லாரி கவிழ்த்து விபத்து

image

திருச்சுழி – நரிக்குடி சாலையில் சூச்சனேரி விலக்கு பகுதியில் இன்று அதிகாலையில் சரக்கு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விருதுநகரில் இருந்து காரைக்குடிக்கு மளிகை சாமான்கள் ஏற்றிச்சென்ற லாரி எதிர்பாராத விதமாக கவிழ்ந்த விபத்தில் டிரைவர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து திருச்சுழி காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!