News April 14, 2024
“ராஜீவ்காந்தியின் ஆன்மா கூட மன்னிக்காது”

புதுவை பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தமிழ்வேந்தனை ஆதரித்து நேற்று உப்பளம் தொகுதியில் அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “ராஜீவ்காந்தி கொலை குற்றவாளி விடுதலையான பிறகு அவரை சட்டமன்றத்திற்கு அழைத்து பொன்னாடை போர்த்தி முத்தம் கொடுத்தவர் ஸ்டாலின்.
அவரை ராகுல்காந்தி கட்டி பிடித்து ஆரத்தழுவியதை ராஜீவ்காந்தியின் ஆன்மா கூட மன்னிக்காது” என பேசினார்.
Similar News
News December 7, 2025
புதுவை: பண்ணை தொழில் செய்ய சூப்பர் வாய்ப்பு!

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் nlm.udyamimitra.in என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பித்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க
News December 7, 2025
புதுச்சேரி முதல்வர் வேண்டுகோள்

இந்திய முப்படை முன்னாள், இந்நாள் மற்றும் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கும், அவர்களது குடும்பத்தாரின் தியாகத்தை நினைவு கூர்ந்து நன்றி தெரிவிக்கும் வகையில் டிச.7-ஆம் தேதி கொடிநாளாக கொண்டாடப்படுகிறது. இதில் அவர்களின் நலனில் அக்கறை காட்டுவது அனைவரின் கடமையாகும். மேலும் இந்த ஆண்டும் கொடிநாள் நிதியை புதுச்சேரி மக்கள் முன்வந்து தாராளமாக வழங்க வேண்டும் என்று முதல்வர் ரெங்கசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.