News April 6, 2025
ராஜஸ்தான் அணி அபார வெற்றி

இன்றைய ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியை ராஜஸ்தான் அணி வெற்றி கொண்டது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான், அபாரமாக விளையாடி 205 ரன்கள் குவித்தது. ஜெய்ஸ்வால் அதிகபட்சமாக 67 ரன்கள் எடுத்தார். அதனை சேஸ் செய்ய களமிறங்கிய பஞ்சாப் ஆரம்பம் முதலே சொதப்பியது. இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் அந்த அணியால் 155 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ராஜஸ்தானின் ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Similar News
News December 8, 2025
இவர் தானா.. நடிகை சுனைனாவின் மணவாளன்!

நடிகை சுனைனாவின் காதலர் இவர்தான். UAE-யை சேர்ந்த இவரின் பெயர் கலீத் அல் அம்மேரி. Influencer ஆக பெரும் பிரபலமடைந்த கலீத்தை, சுனைனா காதலிப்பதாக நீண்ட காலமாக பேசப்பட்டது. கலீத்தின் பிறந்தநாளை முன்னிட்டு, அது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சுனைனாவின் கையை இறுக்கி பிடித்த எடுத்து கொண்ட போட்டோக்களை கலீத் இன்ஸ்டாவில் பதிவிட்டு, தங்களது காதலை அறிவித்துள்ளார்.
News December 8, 2025
பள்ளிகள் 12 நாள்கள் விடுமுறை.. அரசு அறிவிப்பு

அரையாண்டு தேர்வுகள் நாளை மறுநாள் முதல் டிச.23 வரை நடைபெறவுள்ளன. 6-ம் வகுப்புக்கு காலை 10- 12 மணி, 7-ம் வகுப்புக்கு பகல் 2- 4 மணி, 8-ம் வகுப்புக்கு காலை 10- 12.30 மணி, 9-ம் வகுப்புக்கு பகல் 2- 4.30 மணி, 10-ம் வகுப்புக்கு காலை 9.45- பகல் 1 மணி, 11-ம் வகுப்புக்கு பகல் 1.45 – மாலை 5 மணி, 12-ம் வகுப்புக்கு காலை 9.45- பகல் 1 மணி வரை தேர்வுகள் நடைபெறும். டிச.24- ஜன.4 வரை 12 நாள்கள் விடுமுறையாகும்.
News December 8, 2025
நட்புன்னா என்னான்னு தெரியுமா?

8 வயதில், நமது நண்பர்களுக்கு என்ன Gift கொடுத்திருப்போம்? மிஞ்சிப்போனால் பேனா, பென்சில், ரப்பர். ஆனால் சீனாவில் நட்பை வளர்க்க, தாயின் தங்க செயினையே வெட்டி, மாணவர்களுக்கு பரிசாக வழங்கியுள்ளான் 8 வயது சிறுவன். வேடிக்கை என்னவென்றால் ஒரு மாதம் கழித்தே பெற்றோருக்கு இது தெரிந்துள்ளது. பல பேரிடம் கொடுத்ததால், தங்க துண்டுகளை மீட்பது பெரும்பாடாக உள்ளதாக கூறப்படுகிறது. சிறுவயதில் நீங்கள் கொடுத்த கிப்ட் எது?


