News January 2, 2025
ராஜகிரி: தென்னை மரத்தில் இருந்து கீழே விழுந்தவர் பலி

பாபநாசம் தாலுகா, ராஜகிரி ஊராட்சி, மணல்மேடு கிராமம் கீழத்தெருவை சோ்ந்தவர் வீரையன் (67). தேங்காய் பறிக்கும் தொழிலாளியான இவர், நேற்று ராஜகிரியில் ஒருவரது வீட்டில் தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறிக்கும் பணியில் ஈடுபட்ட போது, எதிர்பாராத வகையில் கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து பாபநாசம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 14, 2025
தஞ்சை: 3,371 வழக்குகளுக்கு தீர்வு

தஞ்சை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் மாவட்டத்திலுள்ள கீழமை நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளை சமரசமாக பேசி தீர்வு பெற தேசிய அளவிலான சிறப்பு மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் மொத்தம் 5098 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, 3371 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ. 19 கோடியே 93 லட்சத்து 11 ஆயிரத்து 347 அளவுக்கு தீர்வு தொகையாக வழக்காடிகளுக்கு பெற்று தரப்பட்டது.
News December 14, 2025
தஞ்சை: ஆடு திருடிய 4 பேர் கைது

திருவையாறு அருகே காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழிய வந்த வாகனத்தை சோதனை செய்தனர். சோதனையில் காரில் ஆடுகள் திருடப்பட்டு வந்திருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து காவல்துறையினர் நான்கு ஆடுகளை பறிமுதல் செய்து ஆடுகளை கடத்திய நந்தகுமார், ராஜ்குமார், வெற்றிச்செல்வன் ஆகிய 4 பேரை கைது செய்தனர். இவர்கள் பல்வேறு பகுதிகளில் 35-க்கும் மேற்பட ஆடுகளை கடத்தி விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது.
News December 14, 2025
தஞ்சை: ரயிலில் அடிபட்டு துடிதுடித்து பலி!

பொன்னாங்கண்ணிக்காடு பகுதியை சேர்ந்த நீலகண்டன் என்பவர், செல்போன் பேசியபடி பேராவூரணி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, செங்கோட்டை – தாம்பரம் விரைவு ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பட்டுக்கோட்டை ரயில்வே காவல்துறை வழக்குப்பதிவு செய்து, உடலை பிரேதப் பரிசோதனைக்காக பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


