News April 26, 2025

ராகு பெயர்ச்சி: தஞ்சையில் செல்ல வேண்டிய தலம்

image

தஞ்சை மாவட்டம், திருநாகேஸ்வரத்தில் உள்ள நாகநாத சாமி கோயிலில் ராகு பகவான் தனி சன்னதி கொண்டு மங்கள ராகுவாக அருள்பாலிக்கிறார். 18 மாதத்திற்கு ஒருமுறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும் ராகு பகவான் இன்று மாலை 4.20 மணிக்கு மீன ராசியிலிருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்கிறார். இத்தலத்தில் வழிபட்டால் ராகு தோஷம் நிவர்த்தி அடையும். இதை உறவினர், நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்

Similar News

News November 27, 2025

தஞ்சை: கணவர் அடித்தால் உடனே CALL பண்ணுங்க!

image

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, தஞ்சை மாவட்ட பெண்கள் ஏதாவது குடும்ப வன்முறையை எதிர்கொண்டால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலரை (8012232577) அழைத்து புகார் அளிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News November 27, 2025

தஞ்சை: 12 மாடுகள் அடிபட்டு பலி!

image

தஞ்சை வரை புறவழிச்சாலை பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் 12 மாடுகள் வாகனங்களில் அடிபட்டு இறந்துள்ளன. தீபாவளி அன்று ஒரே நாளில் 7 மாடுகளும், நேற்று முன் தினம் 3 மாடுகளும் பலியாகின. நேற்று 2 மாடுகள் காயம் அடைந்து கிடப்பதாக வரப்பெற்ற தகவலின் அடிப்படையில் டாக்டர்கள் நேரில் சென்று மாடுகளுக்கு மருத்துவம் செய்தனர். சாலையில் மாடுகள் அடிபடுவதை தடுக்க அதிகாரிகள் முன் வர வேண்டும் என்பதை கோரிக்கையாக உள்ளது

News November 27, 2025

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கான படிவங்கள் தொடர்பான சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ள நவ 28, 29 ஆகிய தேதிகளில் வாக்காளர் உதவி மையங்கள் நடைபெறவுள்ளன. இதில், தற்காலிகமாக இடம்பெயர்ந்த வாக்காளர்கள் தங்களது பழைய வாக்கு சாவடிக்கு சென்று கணக்கெடுப்பு படிவங்கள் பெற்று நிறைவு செய்து உடனடியாக வழங்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!