News April 25, 2025

ராகு தோஷம் நீக்கும் நாகநாத சாமி கோயில்

image

திருநாகேஸ்வரத்தில் உள்ள நாகநாத சாமி கோயிலில் ராகு பகவான் தனி சன்னதி கொண்டு மங்கள ராகுவாக அருள்பாலிக்கிறார். இத்தலம் ராகு பகவானுக்குரிய தலமாகும். 18 மாதத்திற்கு ஒருமுறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும் ராகு பகவான் நாளை மாலை 4.20 மணிக்கு மீன ராசியிலிருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்கிறார். இத்தலத்தில் வழிபட்டால் ராகு தோஷம் நிவர்த்தி அடையும். இதை உறவினர், நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்

Similar News

News November 13, 2025

புதுச்சேரியில் இளைஞர் வெட்டி படுகொலை

image

புதுச்சேரி மாநிலம் சாரப் பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்பவர், ரெயின்போ நகர் பகுதியில் நள்ளிரவில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். காவல்துறை உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று, இறந்தவர் உடலை கைப்பற்றி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்பு யார் எதற்காக வெட்டினார்கள் என்று கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

News November 13, 2025

புதுவை: ஸ்மார்ட் மீட்டர் பொருத்த எதிர்ப்பு

image

புதுவை, லாஸ்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட வீடுகளில் நேற்று பழுதடைந்த மின் மீட்டர்களுக்கு பதிலாக ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்தும் பணி நடந்தது. இதை அறிந்த தொகுதி எம்.எல்.ஏ வைத்தியநாதன் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் அப்பகுதிக்கு சென்று ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்த எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மின்துறை இளநிலை பொறியாளர் பவித்ரன் மற்றும் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

News November 13, 2025

புதுவை: ஆதார் அட்டை திருத்தம் இனி ஈஸி!

image

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.மேலும் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே <>இங்கே கிளிக் செய்து<<>> மாற்றம் செய்து கொள்ளலாம். இதுமட்டும் அல்லாது ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!