News April 13, 2025
ரவுடி வரிச்சூர் செல்வத்தை சுட்டுப் பிடிக்க உத்தரவு

மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சூர் செல்வத்தை சுட்டுப் பிடிக்க உத்தரவிடப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கோயம்புத்தூர் கட்டப்பஞ்சாயத்திற்காக ஆயுதங்களுடன் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் காவலர்கள் சம்பந்தப்பட்ட இடத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.தேவைப்பட்டால் காலில் சுட்டு பிடிக்க காவல் துறையினருக்கு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Similar News
News April 23, 2025
சித்திரை திருவிழா ஏற்பாடுகள் – ஐகோர்ட் பாராட்டு

மதுரை: ராமமூர்த்தி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில், சித்திரை திருவிழாவில், மக்களின் பாதுகாப்பிற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருந்தார். விசாரித்த நீதிபதிகள்,சித்திரை திருவிழா ஏற்பாடுகளை அரசு சிறப்பாக செய்து வருகிறது. போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. மனுதாரர் விளம்பர நோக்கில் மனுவை தாக்கல் செய்துள்ளார் என்று கூறி தள்ளுபடி செய்தனர்.
News April 22, 2025
மதுரையில் பள்ளி மாணவிகளுக்கு ஓவிய பயிற்சி பட்டறை

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகில் உள்ள மதுரை கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் 26.04.2025 அன்று ஓவிய பயிற்சி பட்டறை நடைபெற உள்ளது. இவ்வாய்ப்பினை 6 வயது முதல் 16 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவியர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.மேலும், 26.04.2025-அன்று நடைபெறவுள்ள ஓவிய பயிற்சி பட்டறை குறித்து கூடுதல் விவரங்களை கலை பண்பாட்டு துறையை அணுகி பெற்றுக் கொள்ளலாம் என மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
News April 22, 2025
மதுரையில் சுற்றுலா செல்வதற்கு சிறந்த 10 இடங்கள்

மதுரையில் விடுமுறையை கழிக்க சிறந்த சுற்றுலாத்தலங்கள்
▶சமணர் மலை
▶திருமலை நாயக்கர் அரண்மனை
▶மீனாட்சி அம்மன் கோயில்
▶வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம்
▶இடைக்காட்டூர் தேவாலயம்
▶அழகர் கோவில்
▶திருப்பரங்குன்றம் முருகன் கோயில்
▶காசிமார் பெரிய மசூதி
▶காந்தி நினைவு அருங்காட்சியகம்
▶புது மண்டபம்
▶செயிண்ட் மேரி கதீட்ரல்
மதுரையில் உள்ள இந்த இடங்களுக்கு செல்ல விரும்பும் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்