News April 24, 2025
ரவுடி நாகேந்திரன் மீண்டும் வேலூர் சிறையில் அடைப்பு

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்தாண்டு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் வேலூர் சிறையில் இருந்த ரவுடி நாகேந்திரனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் நாகேந்திரனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்நிலையில் நேற்று சிகிச்சை முடிந்து மீண்டும் சிறையில் அடைத்தனர்.
Similar News
News December 2, 2025
வேலூர்: போக்சோ வழக்கில் 20 ஆண்டு கடுங்காவல்!

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தி.ஆ.மில்வாகனன் தலைமையில் நடைபெற்ற சட்டம் ஒழுங்கு கண்காணிப்பு நடவடிக்கையின் போது, 2020ஆம் ஆண்டு கார்ட்டூன் கண்காட்சியில் சிறுமியை பாலியல் துன்புறுத்திய போக்சோ வழக்கில் முக்கிய தீர்ப்பு வழங்கப்பட்டது. வேலூர் போக்சோ நீதிமன்றம் குற்றவாளி ராமசந்திரன் (28), காப்படி பகுதியைச் சேர்ந்தவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்தது.

வேலூரில் சாலை விபத்து!

பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த கார் இன்று (டிச.1) வேலூர் சேண்பாக்கம் அருகே வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சென்டர் மீடியன் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரில் வந்தவர்கள் காயமின்றி உயிர் தப்பினர். இது குறித்து தகவலறிந்த வேலூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காரை மீட்டனர்.