News August 18, 2024

ரவுடி சீசிங் ராஜா தப்பியோட்டம்

image

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய ரவுடியான சீசிங் ராஜா, கிருஷ்ணாம்பட்டினம் துறைமுகத்தில் பதுங்கி இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். ஆனால், போலீசார் வருவதற்கு முன் அவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதையடுத்து, சீசிங் ராஜாவின் மனைவிகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக ஆந்திராவில் ஒரு முறை போலீஸ் வருவதற்கு முன் சீசிங் ராஜா தப்பி சென்ற நிலையில், இம்முறையும் தப்பியுள்ளார்.

Similar News

News October 20, 2025

சென்னை: வீட்டில் செல்வம் பெருக உகுந்த நாள்

image

லட்சுமி குபேர பூஜை செய்ய உகந்த நாள் தீபாவளி திருநாள். பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் விரதம் இருந்து லட்சுமி குபேர பூஜையை செய்யலாம். இந்த பூஜையை செய்தால் லட்சுமி கடாட்சம் உண்டாகும். தலை தீபாவளி கொண்டாடும் பெண்கள் நெய் தீபம் ஏற்றி மகாலட்சுமியை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும், கடன் நீங்கி வீட்டில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கையாக உள்ளது. அனைவர்க்கும் ஷேர் பண்ணுங்க.

News October 20, 2025

சென்னை: 12th பாஸ் போதும்… 1,77,000 சம்பளம்!

image

இந்திய உள்நாட்டு நீர்வழி ஆணையத்தில் (IWAI) காலியாக உள்ள கீழ் பிரிவு எழுத்தர், இளநிலை நீர்வரைபட அளவையர், உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 12th pass போதும். 27 வயதுக்கு மேல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.19,900 -ரூ.1,77,500 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் நவ்.05. ஷேர் பண்ணுங்க.

News October 20, 2025

சென்னை மக்களே முக்கிய எண்கள் அறிவிப்பு

image

தீபாவளியையொட்டி மருத்துவமனையில் இன்றும், நாளையும் (அக்.19, 20) மருத்துவர்கள் பணியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு பொது சுகாதார நோய்த்தடுப்பு துறை இயக்குநர் சோமசுந்தரம் அறிவுறுத்தியுள்ளார். தீபாவளியின் போது அசம்பாவிதம் ஏற்பட்டால் dphepi@nic.in என்ற மின்னஞ்சலுக்கு தகவல் அளிக்கவும், அவசரகால செயல்பாட்டு மையத்தை 94443 40496, 87544 48477 எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!