News January 2, 2025
ரயில் முன் பாய்ந்து ஊழியர் தற்கொலை

திருச்சி ஏர்போர்ட் பகுதியைச் சேர்ந்தவர் கோகுலகிருஷ்ணன். இவர் பிஎஸ்என்எல் அலுவலக கேண்டினில் பணியாற்றி வந்தார். தற்போது கேண்டின் மூடப்பட்டதால், சம்பளம் இல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இதனால் கணவன்,மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்த மன உளைச்சலில் இருந்த கோகுலகிருஷ்ணன் இன்று NO.1டோல்கேட் உத்தமர் கோவில் அருகே வந்தே பாரத் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
Similar News
News December 4, 2025
திருச்சி: வீட்டு வரி பெயர் மாற்ற வேண்டுமா?

திருச்சி மக்களே, உங்க வீட்டு வரி பெயர் மாற்றத்திற்கு அலைச்சல் வேண்டாம். அதற்கு எளிய வழி இருக்கு! உங்க அலைச்சலை போக்க இங்கு <
News December 4, 2025
திருச்சி மாவட்டத்திற்கு பெருமை: உலகளவில் சாதனை!

உலக அளவிலான பளு தூக்கும் போட்டி கடந்த வாரம் தாய்லாந்தில் நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட 16 பேரில், மணப்பாறை கல்பாளையத்தான் பட்டியை சேர்ந்த டிக்சன் ராஜ் மற்றும் கே.பெரியப்பட்டியை சேர்ந்த திலீப் ஆகிய இருவர் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். இதனையடுத்து வெற்றி கோப்பைகளுடன் நேற்று இரவு ஊர் திரும்பிய வீரர்களுக்கு பொதுமக்கள், உறவினர்கள் உற்சாக வரவேற்ப்படித்தனர்.
News December 4, 2025
திருச்சி: சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு

ரயிலில் சபரிமலை செல்லும் பக்தர்களுக்கான ஒரு அறிவிப்பை திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில், “ரயிலில் கற்பூரம் ஏற்றுதல் அல்லது எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை எடுத்துச் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பான அமைதியான யாத்திரைக்காக ஒத்துழையுங்கள். உங்கள் ஒத்துழைப்பே அனைத்து பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்கிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


