News August 26, 2024
ரயில் பயணிகள் கவனத்திற்கு

மைசூரு- செங்கோட்டைக்கு கரூர் வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தென்னக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி செப் 4, 7ஆம் தேதி இரவு 9.20-க்கு புறப்பட்டு மறுநாள் மாலை 4.50 மணிக்கு செங்கோட்டைக்கு செல்லும். நாமக்கல்லுக்கு 6.38 மணி, கரூருக்கு காலை 7.10-க்கு வந்து விடும். செங்கோட்டையில் இருந்து செப்.5, 8 ஆம் தேதிகளில் 7.45-க்கு புறப்பட்டு, மறுநாள் பிற்பகல் 2.30-க்கு செல்லும்.
Similar News
News October 27, 2025
கரூர்: உங்கள் வீட்டில் குழந்தைகள் இருக்கா?

கரூர் உள்ள அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்களில், இன்று முதல் 31ஆம் தேதி வரை 6 மாதம் முதல், 6 வயது வரையான குழந்தைகளுக்கு, ‘வைட்டமின் ஏ’ திரவம் இலவசமாக வழங்கப்படவுள்ளது. குழந்தைகளுக்கு கண் குருடு, குடல், சிறுநீர், சுவாசப் பாதைகள் மற்றும் தோல் போன்ற உறுப்புகளை தொற்றிலிருந்து பாதுகாக்க ‘வைட்டமின் ஏ’ உதவுகிறது. எனவே மறவாமல் குழந்தைகளுக்கு திரவம் அளிக்க வேண்டும்.SHAREit
News October 27, 2025
கரூர் அருகே 4 பேர் அதிரடி கைது!

கிருஷ்ணராயபுரம் தாலுக்கா கோணிச்சிப்பட்டி பிள்ளையார் கோவில் அருகே சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற லாலாபேட்டை போலீசார் சூதாட்டத்தில் ஈடுபட்ட அதே பகுதியைச் சேர்ந்த கருப்பையா (42), கோபாலகிருஷ்ணன் (23), ராகுல் (30), திருப்பதி (54) ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் சீட்டு கட்டுகள், ரொக்கப்பணம் பறிமுதல் செய்தனர்.
News October 27, 2025
கரூரில் சிறப்பு வார்டு குழுக்கூட்டம் ஆணையர் அறிவிப்பு

கரூர் மாநகராட்சியின் எல்லைக்குட்பட்ட 48 வார்டுகளிலும், வரும் 27.10.2025 (திங்கள்) மற்றும் 28.10.2025 (செவ்வாய்) இரண்டு நாட்களில், வார்டு உறுப்பினர்கள் தலைமையில், மாநகராட்சி அலுவலக கூட்டுநர்கள் மூலம் குடியிருப்பு நலச்சங்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் சிறப்பு வார்டு குழுக்கூட்டம் நடைபெற உள்ளது என மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.


