News January 1, 2025
ரயில் பயணிகளிடம் கொள்ளையடித்தவர் கைது

தென்காசி ரயில் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் கற்பக விநாயகம் தலைமையிலான ரயில்வே போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்று நபரை பிடித்து விசாரித்தபோது தேவர் குளத்தை சேர்ந்த விஜய்(25) என்பது தெரிய வந்தது. மேலும் அவர் ரயில் பயணிகளிடம் நகை செல்போன் பறித்தது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.
Similar News
News December 3, 2025
தென்காசி மாவட்டத்திற்கு மஞ்சள் ALERT!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தென்காசி கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. மக்களே வெளியே போன குடை எடுத்துட்டு போங்க…இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.
News December 3, 2025
தென்காசி: மகன் இறந்த துக்கத்தில் தந்தை தற்கொலை

தென்காசி மாவட்டம், கடையம் பகுதியை சேர்ந்த கணபதி மகன் மாயாண்டி கடந்த 8ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் மகன் இறந்த துக்கத்தில் மனமுடைந்து இருந்த மாயாண்டி நேற்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மகன் இறந்த துக்கத்தில் தந்தை இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
News December 3, 2025
தென்காசி: சிலிண்டர் புக் செய்ய புதிய அறிவிப்பு!

தென்காசி மக்களே, கேஸ் புக்கிங் -ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.
பாரத் கேஸ் : https://www.ebharatgas.com
இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in
ஹெச்.பி: https://myhpgas.in
கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. SHARE!


