News August 14, 2024
ரயில் நிலைய பராமரிப்பு காரணமாக கூடுதல் பேருந்துகள்

தாம்பரம் ரயில் நிலைய பராமரிப்பு பணி காரணமாக நாளை முதல் 18-ம் தேதி வரை கூடுதலாக 70 பேருந்துகள் இயக்கப்படுவதாக மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. பல்லாவரம் முதல் செங்கல்பட்டு வரை 30 பேருந்துகளும், பல்லாவரம் முதல் கூடுவாஞ்சேரி வரை 20 பேருந்துகளும், தாம்பரத்தில் இருந்து பிராட்வே மற்றும் தியாகராய நகர் வழித்தடத்தில் கூடுதலாக 20 பேருந்துகளும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 31, 2025
சென்னையில் வேலைவாய்ப்பு முகாம்

சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு முகாம் & தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் இன்று (அக்.31) வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 8th, SSLC, +2, டிகிரி முடித்தவர்கள் இதில் கலந்து கொள்ளலாம். கிண்டியில் உள்ள ஒருங்கிணைந்த வேலை வாய்ப்பு அலுவலக வளாகத்தில், முகாம் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. ஷேர் பண்ணுங்க.
News October 31, 2025
கிராண்ட் மாஸ்டர் ஆன 16 வயது சிறுவன்

சென்னையை சேர்ந்த 16 வயது சிறுவன் இளம்பரிதி செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆகி சாதித்துள்ளார். இதன்மூலம் அவர் தமிழ்நாட்டில் 35 வது கிராண்ட் மாஸ்டர் ஆகவும், இந்தியாவின் 90 வது கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றார். செஸ் வீராங்கனை மற்றும் தேசிய விளையாட்டு அணியினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர் இதற்கு முந்தய 11 ஆட்டத்தில் 9.5 புள்ளிகள் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
News October 31, 2025
சென்னையில் இரவு ரோந்து பணி விவரம்

சென்னையில் இன்று (30.10.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.


