News April 26, 2025
ரயில் நிலையத்தில் வெடிகுண்டு சோதனை

கோவை ரயில் நிலையத்தின் வழியாக தினமும் 50க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. இந்நிலையில் நேற்று டெல்லியில் இருந்து வந்த ரயிலில் மோப்ப நாய்களுடன் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் திடீரென சோதனை மேற்கொண்டனர். மேலும் அந்த ரயிலில் பயணம் மேற்கொண்ட பயணிகளின் உடைமைகளையும் சோதனை செய்தனர்.
Similar News
News September 17, 2025
கோவையில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்!

கோவையில் மின் பாரமரிப்பு பணிகள் காரணமாக இன்று (செப்.17) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, காளப்பட்டி, வீரியம்பாளையம், சேரன் மாநகர், நேரு நகர், சிட்ரா, கரையாம்பாளையம், விளாங்குறிச்சி, தண்ணீர்பந்தல், லட்சுமி நகர், பீளமேடு இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், முருகன்பதி, சாவடிபுதூர், நவக்கரை, அய்யன்பதி, வீரப்பனூர், குமிட்டிபதி, திருமலையாம்பாளையம், ரங்கசமுத்திரம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
News September 17, 2025
கோவை மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு!

கோவை மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (செப். 16) குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடையே விழிப்புணர்வைப் பரப்புங்கள் – சைபர் பாதுகாப்பு என்பது அனைவரின் வேலை. என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
News September 16, 2025
கோவை: இன்றைய இரவு ரோந்து காவலர்கள் விவரம்

கோவை, பெ.நா.பாளையம், பேரூர், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய பகுதிகளில் இன்று (செப்.16) இரவு நேர ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உள்ளூர் அதிகாரியை, மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100ஐ டயல் செய்யலாம் என கோவை மாநகர போலீசார், தங்களது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.