News April 16, 2024
ரயில் நிலையங்களில் மோடி உணவகம் – தமிழிசை

தென்சென்னை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று(ஏப்.16) தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அம்மா உணவகம் போல ரயில் நிலையங்களில் மோடி உணவகம் அமைக்கப்படும்; கோயம்பேடு மார்கெட் வளாகத்தை மாற்ற முயற்சித்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்; சென்னை – கடலூர் இடையே கப்பல் போக்குவரத்து கொண்டுவரப்படும் என தெரிவித்துள்ளார்.
Similar News
News December 1, 2025
அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு!

சென்னை அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் நாளை (டிச.2) நடக்கவிருந்தது. இந்த நிலையில், ‘டிட்வா’ புயலின் காரணமாக தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.
News December 1, 2025
பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதல்வர் ஆய்வு

சென்னையில் இன்று (டிச.1) காலை முதல் தொடர் மழை பெய்து வரும் நிலையில், பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும், மக்களின் குறைகளைக் கேட்டறிந்து உடனடி
நடவடிக்கைக்கு உத்தரவிட்டார். மேலும் சுரங்கப்பாதைகளில் தேங்கிய மழைநீர் அகற்றப்படுவது குறித்தும் ஆய்வு செய்தார்.
News December 1, 2025
JUST IN: சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

‘டிட்வா’ புயல் காரணமாக நாளை (டிச.2) காலை 8 மணி வரை சென்னையில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், சென்னையில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார். ஷேர் பண்ணுங்க!


