News September 13, 2024
ரயில் சேவை ரத்து: காஞ்சிபுரம் சேவையில் மாற்றமில்லை

பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் (செப். 15) ஞாயிற்றுக்கிழமை கடற்கரை – தாம்பரம் இடையே மின்சார சேவைகள் ரத்து செய்யப்படுகிறது. அதன்படி, ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஆனால், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர், அரக்கோணம் ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் எனவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க.
Similar News
News July 9, 2025
காஞ்சிபுரத்தில் 109 காலிப்பணியிடங்கள்

தமிழகத்தில் 2229 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், காஞ்சிபுரத்தில் மட்டும் 109 பணியிடங்கள் உள்ளன. 10th-ல் தேர்ச்சி/ தோல்வியடைந்தவர்களும் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.11,100-ரூ.35,100 வரை சம்பளம் பெறலாம். 10 ஆண்டுகளுக்கு பின் VAO-வாக பதவி உயர்வு வழங்கப்படும். ஆக.,4-க்குள் விண்ணப்பிக்கலாம். தகவலுக்கு (044-27237124)தொடர்பு கொள்ளவும். ஷேர் பண்ணுங்க <<17002055>>தொடர்ச்சி<<>>
News July 9, 2025
கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பது எப்படி?

▶️விண்ணப்பிக்கும் நபர் அதே பகுதி / தாலுகாவை சேர்ந்தவராக இருக்க வேண்டும்
▶️கட்டாயம் தமிழ் பாடத்தைக் கொண்டு படித்திருக்க வேண்டும்.
▶️சைக்கிள்/ இரு சக்கர வாகனம் இயக்க தெரிந்திருக்க வேண்டும்
▶️எழுத்துத் தேர்வு, நேர்காணல் என இருக்கட்டங்களாக தேர்வு நடைபெறும்
News July 9, 2025
காஞ்சிபுரத்தில் 109 பாரன்ஹீட் அளவில் வெப்பம்

காஞ்சிபுரத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், நேற்று அதிகபட்சமாக 43 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது. இது பாரன்ஹீட் அளவில் 109 டிகிரியாகும். இதனால், காஞ்சிபுரம் வாகன ஓட்டிகள் , கட்டுமான தொழிலாளர்கள், உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டனர். கூரியர் ஊழியர்கள், வீடுகளுக்கு சிலிண்டர், வாட்டர் கேன் போடுவோர், உணவு டெலிவரி செய்வோர் என வெயிலில் நடமாடியோர் மிகுந்த அவதிக்குள்ளாகினர்