News April 14, 2024
ரயில் கழிவறை குழாய்களை திருடியவர்கள் கைது

மதுரை கோட்டத்தில் இயங்கும் ரயில்களில் உள்ள கழிவறை குழாய்கள் அடிக்கடி திருடு போனதால், ரயில்வே போலீசார் கண்காணித்தனர். அதன்படி நேற்று சந்தேகத்திற்கு இடமாக சுற்றித் திரிந்த கோ.புதூர் ஆனந்தன், செல்வம் ஆகியோரை சோதனை செய்தனர். சோதனையில், அவர்கள் மது அருந்துவதற்காக கடந்த 2 ஆண்டுகளாக கழிவறை குழாய்களை திருடியது தெரிந்தது. இவர்கள் உட்பட குழாய்களை விலைக்கு வாங்கிய கடைக்காரர்கள் என 4 பேர் கைது செய்யப்பட்டனர்
Similar News
News November 8, 2025
மதுரை: பட்டாவில் பெயர் மாற்ற ஒரே வழி!

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன்<
News November 8, 2025
மதுரை: மணப்பெண் மின்சாரம் தாக்கி பலி

திண்டுக்கலை சேர்ந்த ரூபினிதேவி (25) வாடிப்பட்டியை சேர்ந்த பிரேம்குமார் உடன்
2 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. மனைவியின் நகைகளை கணவர் வாங்கி செலவு செய்ததால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட, திடீரென்று மின்சாரம் தாக்கி ரூபினிதேவி உயிரிழந்ததாக சொல்லபடுகிறது. இதை சந்தேக மரணமாக வாடிப்பட்டி போலீசார் மற்றும் ஆர்டிஓ விசாரணை.
News November 8, 2025
மதுரை: தலைமை ஆசிரியர் மீது மாணவிகள் பாலியல் புகார்

மதுரை, சுப்பிரமணியபுரம் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்று செயல்படுகிறது. இங்கு மாணவிகளுக்கு பள்ளி ஆசிரியர் ஒருவர் வகுப்பறையில் பாடமெடுக்கும் போது, ஆபாசமான வீடியோக்களை காட்டி பாலியல் தொந்தரவு செய்வதாக புகார் எழுந்தது. இதனை அடுத்து காவல் ஆணையர் அலுவலகத்திற்கு மாணவிகள் புகார் அளித்தனர். இது தொடர்பாக ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர் உள்பட 3 பேர் மீது போக்சோ சட்டத்தில் தெற்கு மகளிர் காவல் துறையினர் வழக்குபதிவு.


